UPDATED : ஜூலை 10, 2026 04:44 PM
ADDED : ஜூலை 10, 2026 04:46 PM
அ நிறம் | அளவு
சிவகங்கை:
சிவகங்கை மன்னர் துரைசிங்கம் அரசு கலைக் கல்லுாரியில் தமிழத்துறை முதுகலை மாணவர்களுக்கு கல்லுாரி உதவிப் பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு தொடக்க விழா நடந்தது.
தமிழ் உயராய்வு மைய தலைவர் ராமமூர்த்தி வரவேற்றார். முதல்வர் அந்தோணி டேவிட் நாதன் தலைமை வகித்து பயிற்சி வகுப்பை துவக்கி வைத்தார். வராலாற்றுத் துறைத்தலைவர் கலைச்செல்வி பேசினார்.
புதுச்சேரி பல்கலை சுப்பிரமணிய பாரதியார் தமிழ்மொழி மற்றும் இலக்கிய புலத்தின் ஆய்வாளர் சுசில்குமார் ராமச்சந்திரன் மாணவர்களுக்கு கல்லுாரிப் பேராசிரியர் ஆவதற்கு உரிய தகுதித் தேர்வு பற்றியும், அவற்றின் பாடத்திட்டங்கள் பற்றியும் அவற்றை படிக்கும் முறை குறித்தும் விளக்கினார். பேராசிரியர் சண்முகநாதன் நன்றி கூறினார்.
