UPDATED : நவ 04, 2024 12:00 AM
ADDED : நவ 04, 2024 09:43 AM
கோவை:
கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை பூச்சியியல் துறை சார்பாக, மாதம் தோறும் தேனீ வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது. நவ., மாதத்துக்கு வரும் 6ம் தேதி ஒரு நாள் பயிற்சி வழங்கப்படுகிறது.
தேனீ இனங்களை கண்டறிந்து வளர்த்தல், பெட்டிகளில் தேனீ வளர்க்கும் முறை மற்றும் நிர்வாகம், தேனீக்கு உணவு தரும் பயிர்கள் மற்றும் மகரந்த சேர்க்கை வாயிலாக மகசூல் அதிகரிக்கும் பயிர்களின் விவரம், தேனைப் பிரித்தெடுத்தல், தேனீக்களின் இயற்கை எதிரிகள் மற்றும் நோய் நிர்வாகம் குறித்து பயிற்சி அளிக்கப்படும்.
பயிற்சி நாளில், வேளாண் பல்கலை பூச்சியியல்துறைக்கு காலை 9:00 மணிக்கு வர வேண்டும். அடையாளச் சான்று சமர்ப்பித்து, பயிற்சிக்கட்டணம் ரூ.590 செலுத்த வேண்டும். பயிற்சியின் இறுதியில் சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சி நேரம் காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை.
காளான் வளர்ப்பு
பயிர் நோயியல் துறை சார்பாக, வரும் 5ம் தேதி, ஒரு நாள் காளான் வளர்ப்பு பயிற்சி நடக்கிறது. காலை 10:00 மணி முல் 5:00 மணி வரை நடக்கும் பயிற்சியில் பங்கேற்க, ரூ.590 கட்டணமாக செலுத்த வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0422-6611336 என் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.