UPDATED : டிச 18, 2024 12:00 AM
ADDED : டிச 18, 2024 06:16 PM

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் காகித அடிப்படையிலான பொருட்கள் உற்பத்தி குறித்த திறன்மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது.
அறிமுகம்
வேளாண் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் பதன்செய் பொறியியல் துறையின் கீழ், மாதிரி காகித ஆலை கடந்த 1976ம் ஆண்டு நிறுவப்பட்டது.
கழிவு பொருட்களில் இருந்து காகித அடிப்படையிலான பொருட்களை தயாரிப்பதற்காக காகித துண்டாக்கி இயந்திரம், காகித கூழ் தயாரிக்கும் இயந்திரம், அட்டை தயாரிக்கும் இயந்திரம், நேர்த்தி இயந்திரம், உலர்த்தி, அச்சு இயந்திரம் போன்ற இயந்திரங்களை இந்த ஆலை தயாரிக்கிறது.
பயிற்சியின் அம்சங்கள்:
அலுவலக கோப்புகள், ஸ்பிரிங் கோப்புகள் மற்றும் நாடா கோப்புகள் தயாரித்தல் குறித்த பயிற்சி அளிக்கப்படுகிறது.
பயிற்சி நாட்கள்:
டிசம்பர் 19 மற்றும் 20
விண்ணப்பக் கட்டணம்:
ரூ. 5 ஆயிரம். ஜி.எஸ்.டி., தனி.
விபரங்களுக்கு:
தொலைபேசி- 86680 41185
இமெயில் - processing@tnau.ac.in