UPDATED : ஏப் 10, 2024 12:00 AM
ADDED : ஏப் 10, 2024 10:18 AM
கோவை:
கோவை மாவட்டத்தில், தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு அலுவலர்கள், பள்ளி கல்லுாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி முகாம், 11 மையங்களில் நேற்று நடந்தது.
லோக்சபா தேர்தல் வரும், 19ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகள், மாவட்ட தேர்தல் பிரிவு தரப்பில் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில், இரண்டாம் கட்ட தேர்தல் பயிற்சி முகாம், நேற்று நடந்தது.
பயிற்சியில், ஓட்டு பதிவு இயந்திரம் கையாளும் முறை, வாக்காளர் சரிபார்ப்பு காகித தணிக்கை இயந்திரம் உள்ளிட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.
3,096 ஓட்டுப்பதிவு மையங்களில் பணியாற்றும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள், உதவி அலுவலர்கள் 15,806 பேர் பங்கேற்றனர். மண்டல அதிகாரிகள், தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு, பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி காலை, 10:00 முதல் மாலை, 5:00 மணி வரை நடந்தது.