தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் தொடக்கம்

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் தொடக்கம்

ஆசிரியர்களுக்கு இடமாறுதல் கவுன்சிலிங் தொடக்கம்


UPDATED : ஜூலை 03, 2026 06:21 PM

ADDED : ஜூலை 03, 2026 06:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 03, 2026 06:21 PM ADDED : ஜூலை 03, 2026 06:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:
கரூரில் நடந்த ஆசிரியர்ளுக்கான இடமாறுதல் கவுன்சிலிங்கில், 28 ஆசிரியர்கள் பங்கேற்றனர். வரும் 30ம் தேதி வரை தொடர்ந்து ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடைபெறுகிறது.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கான, இடமாறுதல் கவுன்சிலிங் தொடர்பான ஆரம்ப கட்ட பணிகள் கடந்த 15ல் தொடங்கின.

ஆசிரியர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும், ஆன்லைன் மூலம் பெறப்பட்டு, பதிவேற்றம் செய்யப்பட்டன. பரிசீலனைக்கு பின், மாறுதல் விண்ணப்பங்களின் இறுதி முன்னுரிமை பட்டியல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து கரூர் தான்தோன்றிமலை அரசு மேல்நிலைப் பள்ளியில், தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் நேற்று தொடங்கியது.

மாவட்ட கல்வி அலுவலர் சண்முகவேல் தலைமை வகித்தார். இதில், 38 பள்ளிகளை சேர்ந்த, 38 ஆசிரியர்கள் பணி நிரவல் கலந்தாய்வில் அழைக்கப்பட்டனர். 28 ஆசிரியர்கள் பங்கேற்றனர். இதை தொடர்ந்து, பல்வேறு கட்டங்களாக ஜூலை, 30 வரை கவுன்சிலிங் நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us