UPDATED : மே 09, 2024 12:00 AM
ADDED : மே 09, 2024 10:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நாகப்பட்டினம் :
தமிழகத்தில் நேற்று வெளியான பிளஸ் 2 பொதுத் தேர்வில், நாகையைச் சேர்ந்த இரட்டை சகோதரர்கள், ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.
நாகை மாவட்டத்தில்,71 பள்ளிகளில் இருந்து 3012 மாணவர்கள்,3833 மாணவிகள் என 6845 பேர், பிளஸ் 2 தேர்வெழுதினர். இதில் 2645 மாணவர்கள்,3567 மாணவிகள் என 6242 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாவட்டத்தின் தேர்ச்சி சதவீதம் 91.19.
இதில் வேதாரண்யம் அருகே பஞ்சநதிக்குளம், விக்டரி மேல்நிலைப் பள்ளியில் படித்த இரட்டை சகோதரர்களான நிகில், நிர்மல் இருவரும் தலா 478 மதிப்பெண் பெற்றுள்ளனர். இவர்களது தந்தை செல்லப்பா விவசாயி. இரட்டை சகோதரர்கள் இருவரும் ஒரே பள்ளியில், ஒரே வகுப்பில் படித்து ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.