உல்லாஸ் திட்ட விழிப்புணர்வு: பொம்மலாட்ட வாகன பிரசாரம்
உல்லாஸ் திட்ட விழிப்புணர்வு: பொம்மலாட்ட வாகன பிரசாரம்
UPDATED : மார் 03, 2025 12:00 AM
ADDED : மார் 03, 2025 09:17 AM

புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தை 100 சதவீதம் கல்வி அறிவு பெற்ற மாநிலமாக மாற்றும் பொருட்டு, மாநில எழுத்தறிவு மையம் சார்பில், உல்லாஸ் திட்டம் துவங்கப்பட்டு1,200 பேர் கல்வி பயின்று வருகின்றனர்.
அவர்களுக்கான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு வரும் 23ம் தேதி நடக்கிறது.
இந்நிலையில், உல்லாஸ் திட்டம் மற்றும் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வு குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, இரண்டு நாள் உல்லாஸ் விழிப்புணர்வு பொம்மலாட்ட வாகன பிரசாரம் நடந்தது.
விழிப்புணர்வு வாகனத்தை உல்லாஸ் திட்ட நோடல் அலுவலர் சுகுணா சுகிர்தபாய் கொடியசைத்து துவக்கி வைத்தார். மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாரதிராஜா, பயிற்சி மைய விரிவுரையாளர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதில், தோற்பாவை கூத்து கலைஞர் கலைமாமணி அமுதன் பொம்மலாட்ட குழுவின் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.
வரும் 23ம் தேதி நடக்கும், அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டு தேர்வில் கலந்துகொள்ள விருப்பமுள்ள 15 வயதிற்கு மேற்பட்ட கல்லாதவர்கள், அருகிலுள்ள அரசு தொடக்க பள்ளி தலைமை ஆசிரியரை அணுகி, இத்திட்டத்தில் இணைந்து பயன்பெறலாம்.