UPDATED : ஆக 09, 2026 11:34 PM
ADDED : ஆக 09, 2026 11:36 PM
அ நிறம் | அளவு
தேனி:
தமிழகத்தில் என்.எஸ்.எஸ்., எனப்படும், நாட்டு நலப்பணி திட்ட மாணவர்களுக்கு சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக, அமைப்பின் தென்மண்டல கண்காணிப்பாளர் நேருராஜன் தெரிவித்தார்.
அவர் கூறியதாவது:
தமிழகத்தில் அனைத்து உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளிலும் என்.எஸ்.எஸ்., என்ற அமைப்பு உள்ளது. அதில் உள்ள மாணவர்கள் சுற்றுச்சூழல் மேம்பாடு பணிகள், சமூக சேவை செய்து வருகின்றனர்.
இந்த அமைப்பிற்கு என்று தனி சீருடைகள் இல்லை. மாணவர்கள் குடியரசு தின அணிவகுப்பில் பங்கேற்கும் போது அவர்களுக்கு வெள்ளை நிற மேல்சட்டை, கிரே நிற பேன்ட் வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், இதே சீருடையை தமிழக என்.எஸ்.எஸ்., மாணவர்களுக்கு வழங்க ஆலோசிக்கப்பட்டது. அதன்படி, இந்த சீருடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
