கல்வித்துறை நியமன விதிகளில் திருத்தம் செய்ய வலியுறுத்தல்
கல்வித்துறை நியமன விதிகளில் திருத்தம் செய்ய வலியுறுத்தல்
UPDATED : டிச 20, 2024 12:00 AM
ADDED : டிச 20, 2024 09:47 AM

புதுச்சேரி:
கல்வித்துறை நியமன விதிகளில் திருத்தம் செய்ய வேண்டும் என, அரசு ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தெரிவித்துள்ளது.
கவுரவத் தலைவர் சேஷாச்சலம் அறிக்கை:
கல்வித்துறையில், துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வின் போது, இரு வழி வாய்ப்புகள் உள்ளது. கற்பித்தல் பணியில் விருப்பமுள்ள ஆசிரியர்கள், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியராகவோ, நிர்வாக பதவிகளுக்கு விருப்பப்படக்கூடிய ஆசிரியர்கள், துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களாவோ வாய்ப்பினை தேர்வு செய்து கொள்ளலாம்.
பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள், கற்பித்தல் பிரிவில், விருப்பம் உள்ளவர்கள் விரிவுரையாளராகவும், நிர்வாகப் பிரிவில், விருப்பமுள்ளவர்கள் தலைமை ஆசிரியர் நிலை, II ஐ தேர்வு செய்து கொள்ள இரு வழி வாய்ப்புகள் உள்ளது.கல்வித்துறையின் நியமன விதிகளில், அப்பதவிகளுக்கான விருப்பம் தெரிவிக்க வாய்ப்பு பெறுவது தொடர்பாக குறிப்பிடவில்லை. அதனால், ஆசிரியர்களை கட்டாயப்படுத்தி எந்த பதவி உயர்வு முன்னர் வருகிறதோ அதை தேர்வு செய்ய வேண்டிய கட்டாய சூழலுக்கு தள்ளப்படுகின்னர்.
எனவே சம்பந்தப்பட்ட பதவிகளின் நியமன விதிகளை திருத்தம் செய்ய வேண்டும்.