UPDATED : ஏப் 25, 2024 12:00 AM
ADDED : ஏப் 25, 2024 05:17 PM

வாஷிங்டன்:
அமெரிக்க குடியுரிமை பெற்றதில் மெக்சிகோவிற்கு அடுத்து இந்தியாவைச் சேர்ந்தவர்கள் 2வது இடத்தில் உள்ளனர்.
இது தொடர்பாக வெளியான அறிக்கையில், கடந்த 2022 ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, அமெரிக்க மக்கள் தொகை 33.3 கோடி. அதில், 4.6 கோடி( 14 சதவீதம்) பேர் வெளிநாட்டினர். இதில் 2.45 கோடி பேருக்கு(53 சதவீதம்) அமெரிக்க குடியுரிமை கிடைத்து உள்ளது.
இந்த பட்டியலில் மெக்சிகோவை சேர்ந்தவர்கள் முதலிடத்தில் உள்ளனர். அந்நாட்டைச் சேர்ந்த 1,28,878 பேருக்கு அமெரிக்க குடியுரிமை கிடைத்து உள்ளது. இதற்கு அடுத்து இந்தியாவைச் சேர்ந்த 65,960 பேருக்கும், பிலிப்பைன்சைச் சேர்ந்த 53,413 பேருக்கும், கியூபாவைச் சேர்ந்த 46,913 பேருக்கும், டொமினிக்கன் குடியரசைச் சேர்ந்த 34,525 பேருக்கும், வியட்நாமைச் சேர்ந்த 33,246 பேருக்கும், சீனாவைச் சேர்ந்த 27,038 பேருக்கும் அமெரிக்க குடியுரிமை கிடைத்து உள்ளது எனக்கூறப்பட்டு உள்ளது.