தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழ் படிக்க கோவை வந்த உத்தர பிரதேச மாணவர்கள்

தமிழ் படிக்க கோவை வந்த உத்தர பிரதேச மாணவர்கள்

தமிழ் படிக்க கோவை வந்த உத்தர பிரதேச மாணவர்கள்


UPDATED : ஜூன் 18, 2026 06:39 PM

ADDED : ஜூன் 18, 2026 06:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 18, 2026 06:39 PM ADDED : ஜூன் 18, 2026 06:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
ஸ்ரீ கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லுாரியில், உத்தரப் பிரதேசத்தின் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 30 மாணவர்களுக்கான 'பாரதிய பாஷா இன்டர்ன்ஷிப் புரோகிராம் 2.0' என்ற 10 நாள் பயிற்சி முகாம் துவங்கியது.

வித்யா பாரதி உச்ச சிக்ஷா சன்ஸ்தான் மற்றும் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவன பங்களிப்புடன் முகாம் நடக்கிறது. தமிழ் மொழி, இலக்கியம், கலாசாரம் மற்றும் பாரம்பரிய வாழ்வியல் முறைகளை அறிமுகப்படுத்தும் நோக்கில் நடத்தப்படுகிறது.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மலர்விழி பேசுகையில், “உலகளவில் தமிழ் பாரம்பரியத்துக்கு தனித்துவமான இடம் உள்ளது. இத்தகைய திட்டங்கள் மாணவர்களிடையே மொழி ஒற்றுமையையும், கலாசார புரிதலையும் வலுப்படுத்தும்,” என்றார்.

இந்திய சமூக அறிவியல் ஆராய்ச்சி கவுன்சிலின் முன்னாள் தலைவர் கனகசபாபதி, வித்யா பாரதி உச்ச சிக்ஷா சன்ஸ்தானின் தேசிய ஒருங்கிணைப்பு செயலாளர் ரகுநந்தன், தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் சுந்தரமூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us