தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/யாழ்ப்பாணம் மையத்திற்கு வள்ளுவர் பெயர்: கவர்னர் நெகிழ்ச்சி

யாழ்ப்பாணம் மையத்திற்கு வள்ளுவர் பெயர்: கவர்னர் நெகிழ்ச்சி

யாழ்ப்பாணம் மையத்திற்கு வள்ளுவர் பெயர்: கவர்னர் நெகிழ்ச்சி


UPDATED : ஜன 20, 2025 12:00 AM

ADDED : ஜன 20, 2025 02:28 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜன 20, 2025 12:00 AM ADDED : ஜன 20, 2025 02:28 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் பெருமையை பரப்பும் பிரதமரின் பணியில் மற்றொரு மைல்கல் என கவர்னர் ரவி தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை:

தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தின் வளர்ச்சியில் அதிக கவனம் செலுத்தி, இந்தியாவின் உதவியுடன், யாழ்ப்பாணத்தில் உள்ள புகழ்பெற்ற கலாசார மையம் கட்டப்பட்டது.

இதற்கு, திருவள்ளுவர் கலாசார மையம் என மறு பெயரிட்டிருப்பது, உலகம் முழுதும் பழம்பெரும் வாழும் மொழி மற்றும் கலாசாரமான, தமிழின் பெருமையை பரப்புவதற்கான, பிரதமரின் தொடர்ச்சியான பணியில் மற்றொரு மைல் கல்லாகும்.

இது, இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையிலான, பல்லாயிரக்கணக்கான ஆண்டுகள் தொன்மையான கலாசாரம் மற்றும் நாகரிக தொடர்பையும் அடிக்கோடிட்டு காட்டுகிறது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us