UPDATED : ஜன 10, 2025 12:00 AM
ADDED : ஜன 10, 2025 05:16 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
குடியரசு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் கல்வி அமைச்சகம் நடத்தும் வீர் கதா 4.0 போட்டியில் வெற்றி பெறும் 100 மாணவர்கள் குடியரசுதின அணிவகுப்பை காணும் வாய்ப்பு பெறுவார்கள்.
கடந்த மூன்று ஆண்டுகளாக வீர் கதா எனும் மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தாண்டு 2 லட்சத்து 31 ஆயிரம் பள்ளிகளில் இருந்து ஒரு கோடியே 76 லட்சம் மாணவர்கள் இந்த வீர் கதா 4.0 வில் பங்கேற்றனர். இதிலிருந்து நூறு வெற்றியாளர்கள் தேசிய அளவில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். ஒவ்வொரு வெற்றியாளருக்கும் ரூ.10,000 பரிசுத் தொகையாக வழங்கப்படுகின்றன. மேலும் இவர்கள் தலைநகரில் ஜன.,26ம் தேதி நடைபெறும் குடியரசுதின அணிவகுப்பை நேரில் காணும் வாய்ப்பைப் பெறுவார்கள்.