துணைவேந்தர் நியமன விவகாரம்; கேரள அரசு மற்றும் கவர்னருக்கு கூட்டு அதிகாரம்
துணைவேந்தர் நியமன விவகாரம்; கேரள அரசு மற்றும் கவர்னருக்கு கூட்டு அதிகாரம்
UPDATED : ஜூலை 31, 2025 12:00 AM
ADDED : ஜூலை 31, 2025 04:51 PM

புதுடில்லி:
கேரளா பல்கலை துணைவேந்தர் நியமன விவகாரத்தில் கேரள அரசும், கவர்னரும் இணைந்து முடிவெடுக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கேரள டிஜிட்டல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் தற்காலிக துணைவேந்தராக சிசா தாமஸையும், ஏ.பி.ஜே., அப்துல்கலாம் தொழில்நுட்ப பல்கலைக்கழக துணைவேந்தராக கே. சிவபிரசாதையும் நியமனம் செய்து கடந்த ஆண்டு நவம்பரில் கவர்னர் ஆணையிட்டார்.
இதை தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் ஜே.பி., பர்டிவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய பெஞ்ச், துணைவேந்தர்களை நியமிக்கும் விவகாரத்தில் கேரள அரசும், கவர்னரும் ஒருங்கிணைந்து முடிவெடுக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர்.
மாணவர்களின் கல்வி நலன்கள் அரசியல் மோதல்களால் பாதிக்கப்படக்கூடாது என்று கூறிய நீதிபதிகள், புதிய துணைவேந்தர்களை நியமிக்கும் வரையில், தற்போதைய தற்காலிக துணைவேந்தர்களின் பதவியை நீட்டிக்கலாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.