தினமலர் நடத்தும் வித்யாரம்பம்: குட்டீஸை அழைத்து வாங்க!
தினமலர் நடத்தும் வித்யாரம்பம்: குட்டீஸை அழைத்து வாங்க!
UPDATED : அக் 04, 2024 12:00 AM
ADDED : அக் 04, 2024 10:20 AM

திருப்பூர்:
தினமலர் பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் ப்ளே ஸ்கூல் இணைந்து, வரும், 12ம் தேதி, வித்யாரம்பம் நிகழ்ச்சியை நடத்துகின்றன.
எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் என்பதற்கேற்றவாறு, நவராத்திரி பண்டிகையின் பத்தாம் நாள் விஜயதசமி பண்டிகை கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், நெல்லில், அ... ஆ... எழுதி குழந்தைகள் தங்கள் கல்வியை துவங்குவர்.
விஜயதசமி நன்னாளில் கல்வி, கலைகள் என எது துவங்கினாலும், அது வெற்றிகரமாக முடியும். அவ்வகையில், வித்யாரம்பமும் ஒன்று. அதற்காக, 'தினமலர்' பட்டம் மாணவர் பதிப்பு மற்றும் ஸ்ரீ சக்தி இன்டர்நேஷனல் ப்ளே ஸ்கூல் இணைந்து, வித்யாரம்பம் நிகழ்ச்சி, வரும், 12ம் தேதி, காலை, 7:35 முதல், 10:00 மணி வரை, திருப்பூர், அவிநாசி ரோடு, ராக்கியாபாளையம் - ஐஸ்வர்யா கார்டனிலுள்ள, ஸ்ரீபுரம், ஜகன்மாதா ஸ்ரீராஜராஜேஸ்வரி கோவிலில் நடத்துகிறது.
இதில், இரண்டரை வயது முதல், மூன்றரை வயது குழந்தைகளை பெற்றோர் அழைத்து வரலாம்.
விருப்பம் உள்ள பெற்றோர், தங்கள் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் போன் எண் ஆகியவற்றை 96887 - 53040 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு அனுப்பி முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். காலை, 10:00 முதல், மாலை, 5:00 மணி வரை மட்டுமே முன் பதிவு செய்யலாம்.
இதில், பங்கேற்க அனுமதி முற்றிலும், இலவசம். பெற்றோர் தங்கள் செல்ல குழந்தைகளை இந்த வித்யாரம்பம் நிகழ்ச்சியில் பங்கேற்க வைத்து, கல்வி பயணத்தை இனிதே துவக்கலாம்.