தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில் பயிற்சி மையங்கள்

வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில் பயிற்சி மையங்கள்

வேலைவாய்ப்பை அதிகரிக்க தொழில் பயிற்சி மையங்கள்


UPDATED : ஜூன் 07, 2026 11:40 PM

ADDED : ஜூன் 07, 2026 11:41 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூன் 07, 2026 11:40 PM ADDED : ஜூன் 07, 2026 11:41 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நரிக்குடி:
மாவட்டத்தின் பின்தங்கிய பகுதியாக உள்ள நரிக்குடி, அதனைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பு வசதிகளை அதிகரிக்க தொழில் பயிற்சி மையங்கள், சிறு தொழில் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

நரிக்குடி பகுதியில் விவசாயம், கூலி வேலைகளை வாழ்வாதாரமாகக் கொண்டுள்ளனர். பருவமழை பொய்த்துப் போகும் காலங்களில் விவசாயப் பணிகள் பாதிக்கப்படுவதால் கிராமப்புற இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அவதிப்படுகின்றனர். பலர் மதுரை, சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும், வெளிமாநிலங்களுக்கும் இடம்பெயர்ந்து வேலை தேடும் நிலை உருவாகியுள்ளது.

பட்டப்படிப்பு, தொழிற்கல்வி முடித்த இளைஞர்களும் திறனுக்கு ஏற்ற வேலைவாய்ப்புகளை பெற முடியாமல் தவித்து வருகின்றனர். நரிக்குடி பகுதியில் அரசு சார்பில் தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்கள் இல்லாததால், கணினி பயிற்சி, மின் சாதன பழுதுபார்ப்பு, தையல், மோட்டார் வாகன பராமரிப்பு, மொபைல் சர்வீஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப பயிற்சிகளை பெறுவதற்காக வெளியூர் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

மாவட்ட நிர்வாகம் சார்பில் தொழில் பயிற்சி மையங்களை அமைத்து இளைஞர்களுக்கு இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்க வேண்டும். பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக தையல் மையங்கள், உணவுப் பொருள் தயாரிப்பு அலகுகள், கைத்தொழில் பயிற்சி மையங்கள் போன்றவற்றை ஊக்குவிக்க வேண்டும்.

அதே போல், சிறு, குறு தொழில் தொடங்க விரும்பும் இளைஞர்களுக்கு வங்கிக் கடன், மானியம், தொழில் ஆலோசனைகளை எளிதாக வழங்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். உள்ளூர் அளவில் தொழில் வாய்ப்புகள் உருவானால் நகரங்களுக்கு இடம்பெயர்வது குறைவதுடன், கிராமப்புற பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்.

தற்போது தொழில்துறை அமைச்சராக இந்த மாவட்டத்தை சேர்ந்தவர் பொறுப்பு வகிப்பதால் பின் தங்கிய பகுதிகளை கணக்கில் எடுத்துக் கொண்டு தொழிற்பயிற்சி மையங்கள், தொழில் திட்டங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக, பின் தங்கிய நரிக்குடி பகுதியின் பொருளாதார வளர்ச்சிக்கும் இளைஞர்களின் எதிர்கால முன்னேற்றத்திற்கும் தொழில் பயிற்சி மையங்கள், சிறு தொழில் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என இளைஞர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us