UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 03:27 PM
புதுடில்லி:
மாணவர்களின் நலனை பாதுகாக்க, தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும், என ராஜ்யசபாவில் சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல் தெரிவித்துள்ளார்.
நீட் எனப்படும், மருத்துவ படிப்புகளுக்கான தேசிய நுழைவுத் தேர்வு தொடர்பான துணை கேள்விக்கு, மத்திய சுகாதாரத் துறை இணை அமைச்சர் அனுப்ரியா படேல், அளித்த பதில்:
வினாத்தாள் கசிவு பற்றிய குற்றச்சாட்டுகளைப் பொறுத்தவரை, உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு ஏற்கனவே எங்களுக்கு வந்து விட்டது. மாணவர்களின் நலனை பாதுகாப்பதில் அரசு உறுதி பூண்டுள்ளது. இதில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
இளநிலை மருத்துவப் படிப்புக்கான முதல் சுற்று கவுன்சிலிங், ஆக., 14ல் துவங்கும். உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, நான்கு சுற்றுகளாக கவுன்சிலிங் நடத்தப்படும். நான்காவது சுற்று கவுன்சலிங் அக்., 24ல் முடிவடையும்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.