UPDATED : ஆக 01, 2024 12:00 AM
ADDED : ஆக 01, 2024 03:26 PM
குருகிராம்:
சமீபத்தில், ஹூண்டாய் நிறுவனத்தின் வேலை வாய்ப்பு முகாம், தமிழகம், உத்தர பிரதேசம், மஹாராஷ்டிரா, அசாம், அருணாச்சல பிரதேசம், தெலுங்கானா, மேற்கு வங்கம், உத்தரகண்ட், குஜராத் ஆகிய மாநிலங்களில் நடத்தப்பட்டது.
அதில், ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில் பயின்ற, 403 மாணவர்களுக்கு, நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்கிஉள்ளது. ஹூண்டாய் நிறுவனத்தின் தனியார் சமூக பொறுப்பு பிரிவு, மாணவர்களுக்கான திறன் மேம்பாட்டு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இதன் வாயிலாக, மாணவர்களின் தொழில்துறை திறனை மேம்படுத்துவது, நவீன தொழில் நுட்பங்களை கற்றுக்கொடுப்பது, தொழில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவது போன்றவற்றை செய்து வருகிறது.
தற்போது, நாடு முழுதும், 76 அரசு தொழில் பயிற்சி நிலையங்கள் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளுடன் கூட்டு சேர்ந்து, இந்த திட்டத்தை, ஹூண்டாய் நிறுவனம் வெற்றிகரமாக செயல்படுத்தி வருகிறது.