UPDATED : அக் 22, 2025 08:40 AM
ADDED : அக் 22, 2025 08:42 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:
சென்ட்ரல் ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி புத்தக இயந்திரத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்னை ரயில் கோட்ட அதிகாரிகள் கூறியதாவது:
பயணியரிடம், புத்தக வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் வகையில், சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியர் காத்திருப்பு பகுதி அருகில், கடந்த 10ம் தேதி தானியங்கி புத்தக விற்பனை இயந்திரம் திறக்கப்பட்டது.
நாவல்கள், தன்னம்பிக்கையூட்டும் புத்தகங்கள், சிறுவர் இலக்கியம் எனத் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்களின் தொகுப்பு வழங்கப்படுகிறது. இது, ஏராளமான பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.
வரும் மாதங்களில் மற்ற முக்கிய நிலையங்களிலும் இத்தகைய, தானியங்கி புத்தக விற்பனை இயந்திரங்கள் நிறுவப்படும்.
இவ்வாறு கூறினர்.