இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் கட்டுரை போட்டிக்கு படைப்புகள் வரவேற்பு
இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் கட்டுரை போட்டிக்கு படைப்புகள் வரவேற்பு
UPDATED : அக் 22, 2025 08:39 AM
ADDED : அக் 22, 2025 08:40 AM

புதுச்சேரி:
கருத்தரங்க கட்டுரை போட்டிக்கு படைப்புகளை அனுப்பலாம் என, இந்திய பொது நிர்வாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்திய பொது நிர்வாக நிறுவனத்தின் கிளை சார்பில், முன்னோட்ட கருத்தரங்கம் வரும் 25ம் தேதி நடக்கிறது. அதையொட்டி கட்டுரைப்போட்டி கல்லுாரி இறுதியாண்டு பயிலும் மாணவர்களுக்காக தமிழிலும், ஆங்கிலத்திலும் நடத்தப்பட உள்ளது.
தமிழில் இந்த கட்டுரைபோட்டி, மின்னணு ஆட்சி, நிர்வாக சீர்திருத்தம் மற்றும் திறன் மேம்பாடு, பொறுப்பான வெளிப்படையான நிர்வாகம் உள்ளிட்ட தலைப்புகளில் நடத்தப்படுகிறது.ஆங்கிலத்தில் டிஜிட்டல் கவர்னன்ஸ், அட்மினிஸ்ட்ரேட்டிவ் ரிபார்ம்ஸ் கெபாசிட்டி பில்ட்டிங், அக்வுண்டபிள் அண்ட் டிரான்ஸ்பரன்ட் அட்மினிஸ்ட்ரேஷன் நடத்தப்படுகிறது.
கட்டுரை படைப்புகளை வரும் 24ம் தேதிக்குள், பெயர், துறை, கல்லுாரி, மொபைல் எண், அடையாள அட்டை நகலுடன் இணைத்து, iipaprbrc2025@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் அனுப்பி வைக்க வேண்டும்.
கட்டுரை படைப்புகள் ஏதேனும் ஒரு தலைப்பில் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் 350 முதல் 500 வார்த்தைகளுக்கு மிகாமல் ஏ-4 தாளில் 2 பக்கத்திற்கு மிகாமல் இருத்தல்வேண்டும். வெற்றிப் பெறும் மாணவர்களுக்கு பரிசு, சான்றிதழ் வழங்கப்படும். போட்டியில் பங்கேற்கும் அனைத்து மாணவர்களுக்கும் இ-சான்றிதழ் அனுப்பி வைக்கப்படும்.
இத்தகவலை இந்திய பொது நிர்வாக நிறுவன தலைவர் தனபால் தெரிவித்துள்ளார்.