தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன?

பெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன?

பெற்றோரிடம் குழந்தைகள் எதிர்பார்ப்பது என்ன?


UPDATED : நவ 14, 2026 01:46 PM

ADDED : நவ 14, 2026 01:48 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 01:46 PM ADDED : நவ 14, 2026 01:48 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:
பொதுவாக குழந்தைகளின் படிப்பு, ஒழுக்கம், திறமை என அனைத்துக்கும் ஆசிரியர்கள், பெற்றோர்கள்தான் மதிப்பெண் போடுகின்றனர். ஆனால், பெற்றோருக்கு குழந்தைகளே மதிப்பெண் போட்டால் எப்படி இருக்கும்?

பெற்றோர்களுக்கு மதிப்பெண் வழங்குமாறு மூன்று பள்ளி மாணவிகளிடம் கேட்கப்பட்டது. அதில், பெற்றோர் மீது அவர்கள் வைத்திருக்கும் அன்பும், எதிர்பார்ப்புகளும், சிறு சிறு கோபங்களும் வெளிப்பட்டன.

ஆறாம் வகுப்பு படிக்கும் ஹர்ஷினியிடம் பெற்றோருக்கு 100க்கு எத்தனை மதிப்பெண் வழங்குவாய் என்று கேட்டபோது, 100க்கு 100 என மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

தினமும் 2 முதல் 4 மணி நேரம் பெற்றோர் தன்னுடன் செலவிடுவதாகவும், தனது பேச்சுகளைப் பொறுமையாகக் கேட்பதாகவும் கூறினார். இருப்பினும், பெற்றோரிடம் ஒரு மாற்றத்தைச் செய்யச் சொல்ல வாய்ப்பு கிடைத்தால், இரவு நேரத்தில் மொபைல் பார்ப்பதை நிறுத்த வேண்டும் என்பதே தனது விருப்பம் என்றார்.

அதே ஆறாம் வகுப்பு படிக்கும் ஹாசினியும் தனது பெற்றோருக்கு 100க்கு 100 மதிப்பெண் வழங்கினார். பெற்றோர் தன்னுடன் 3 முதல் 4 மணி நேரம் செலவிடுவதாகவும், தனது பேச்சுகளைப் பொறுமையாகக் கேட்பதாகவும் தெரிவித்தார். ஆனால், தன்னையும் மற்றொரு குழந்தையையும் ஒப்பிட்டுப் பேசுவது பிடிக்காது என்ற சிறு கோபத்தை வெளிப்படுத்தினார்.

மூன்றாம் வகுப்பு படிக்கும் அக்ஷராவிடம் கேட்டபோது, தனது பெற்றோருக்கு 100-க்கு 200 மதிப்பெண் வழங்குவேன் என உற்சாகமாகக் கூறினார்.

பெற்றோர் தன்னுடன் விளையாடிப் பேசுவது தனக்குப் போதுமானதாக இருப்பதாகவும் தெரிவித்தார். அதே நேரத்தில், பெற்றோர் வெளியே செல்லும்போது தன்னை விட்டுச் செல்வது வருத்தமளிப்பதாகவும், அதை மாற்றிக்கொண்டால் நன்றாக இருக்கும் என்றும் தனது குழந்தைத்தனமான ஆசையை வெளிப்படுத்தினார்.

மூன்று குழந்தைகளின் பதில்களிலும் பெற்றோர் மீதான அன்பு வெளிப்பட்டாலும், அவர்களுக்குச் சொல்ல வேண்டிய சில எதிர்பார்ப்புகளும் இருக்கின்றன. குழந்தைகளுக்கு விலையுயர்ந்த பரிசுகளோ, அதிக வசதிகளோ மட்டும் ஆசைகள் அல்ல.

தங்களுக்காக நேரம் ஒதுக்குவதும், தங்கள் உணர்வுகளைப் புரிந்துகொள்வதும், தங்களை மற்றவர்களுடன் ஒப்பிடாமல் இருப்பதும்தான் முக்கியம் என்பதை அவர்களின் பதில்கள் உணர்த்துகின்றன.



தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us