குழந்தைகள் தினம்; கேக், வாழ்த்து அட்டையால் மகிழ்ச்சி
குழந்தைகள் தினம்; கேக், வாழ்த்து அட்டையால் மகிழ்ச்சி
UPDATED : நவ 14, 2026 01:45 PM
ADDED : நவ 14, 2026 01:46 PM
குழந்தைகள் தினத்தையொட்டி, அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர், மாணவியருக்கு கேக் வழங்கப்பட்டது.
* பொள்ளாச்சி பாலகோபாலபுரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், மாணவர்களுக்கு முதல்வர் விஜய் வாழ்த்து கடிதம் மற்றும் கேக் வழங்கப்பட்டது. முதல்வர் படம் பொறித்த வாழ்த்து அட்டை பெற்ற குழந்தைகள், உற்சாகத்தில் 'ஐ விஜய் மாமா' என குரல் எழுப்பி துள்ளினர். தொடர்ந்து, கேக் வழங்கப்பட்டது.
* ஆர்.கே.நகர் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் பள்ளியில், எம்.எல்.ஏ., நித்தியானந்தன் பங்கேற்று, கேக் மற்றும் முதல்வரின் வாழ்த்து அட்டைகளை வழங்கினார்.
* தொப்பம்பட்டி நடுநிலைப்பள்ளியில், மறைந்த முன்னாள் பிரதமர் நேருவின் புகைப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து, வாழ்த்து அட்டை மற்றும் கேக் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். வடக்கு ஒன்றிய பார்வையாளர் திருநிறைச்செல்வி மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
* சந்தேகவுண்டன்பாளையம் துவக்கப்பள்ளியில், வண்ண, வண்ண பலுான்களை கட்டிக்கொண்டு, ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என ஆரவாரத்துடன் கொண்டினர். விளையாட்டு போட்டிகள் நடந்தது. கேக், வாழ்த்து அட்டை வழங்கப்பட்டது. கடந்தாண்டு பெற்ற உண்டியல்களை மகிழ்ச்சியுடன் கொண்டு வந்த மாணவர்கள், சேமித்த பணத்தை எண்ணி பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.
பள்ளி தலைமையாசிரியர் அமுதராணி பேசினார். மேலாண்மை குழு சார்பில் உண்டியல்கள் வழங்கப்பட்டன. கிராம நிர்வாக அலுவலர் மோகன், ஆசிரியர் ராஜேஷ் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.
* சேத்துமடை பள்ளியில், மாணவர்கள் மறைந்த முன்னாள் பிரதமர் நேரு போன்று தொப்பி அணிந்து குழந்தைகள் தினத்தை கொண்டாடினர்.
கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு உட்பட்ட துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம், 615 பள்ளிகளில், 57,510 மாணவர்கள், ஆசிரியர், ஆசிரியர் இல்லாத அலுவலர்கள், 3,323 பேருக்கும், முதல்வரின் வாழ்த்து அட்டை, கேக் வழங்கப்பட்டது,' என்றனர்.
வால்பாறை
* வால்பாறை நகர் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்த விழாவில், வட்டார கல்வி அலுவலர் செல்வி, மாணவர்களுக்கு முதல்வரின் வாழ்த்து அட்டைகளுடன் கூடிய கேக் வழங்கினார். நகராட்சி நிர்வாக அலுவலர் செந்தில்வேல், பள்ளி தலைமை ஆசிரியர் கலைசெல்வி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
* ஸ்டேன்மோர் நகராட்சி துவக்கப்பள்ளியில் நடந்த விழாவுக்கு தலைமை ஆசிரியர் அழகம்மாள் தலைமை வகித்தார். எஸ்.எஸ்.ஏ., திட்டத்தின் ஆசிரியர் பயிற்றுனர் செந்தில்குமார் கலந்து கொண்டு, மாணவர்களுக்கு கேக் வழங்கினார். நல்லகாத்து துவக்கபள்ளியில் நடந்த விழாவில், தலைமை ஆசிரியர் ரஞ்சித் தலைமையில், வட்டார கல்வி அலுவலர் மாணவர்களுக்கு கேக் வழங்கினார்.
உடுமலை
* உடுமலை சிவசக்தி காலனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், வாழ்த்து அட்டை மற்றும் கேக்குகள், மாணவ, மாணவியருக்கு வழங்கப்பட்டது.
* மடத்துக்குளம் காரத்தொழுவு அரசு மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாணவர்களுக்கு பள்ளி ஆசிரியர்கள் பூக்கள் கொடுத்து வரவேற்றனர். மாணவர்கள் அனைவருக்கும் கேக் வழங்கப்பட்டது.
பேச்சுப்போட்டி, கட்டுரை, ஓவியம், பாட்டு, நடன போட்டி மற்றும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. மரக்கன்றுகள் நடப்பட்டது. மடத்துக்குளம் வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர் நாகராஜ் நன்றி தெரிவித்தார்.
* குடிமங்கலம் ஒன்றியம், ஆ.அம்மாபட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், கட்டுரை, பேச்சு, கவிதை, ஓவியம், பாட்டு உள்ளிட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. கேக் மற்றும் வாழ்த்து அட்டை மாணவர்களுக்கும் வழங்கப்பட்டது. தலைமையாசிரியர் பால்ராஜ், ஆசிரியர்கள் ரேணுகா மற்றும் சங்கரேஸ்வரி பங்கேற்றனர்.
