தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/போதை பொருளால் ஆபத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

போதை பொருளால் ஆபத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு

போதை பொருளால் ஆபத்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு


UPDATED : நவ 14, 2026 01:44 PM

ADDED : நவ 14, 2026 01:45 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 14, 2026 01:44 PM ADDED : நவ 14, 2026 01:45 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை:
போதை பொருட்களுக்கு மாணவர்கள் ஒரு போதும் அடிமையாக கூடாது, என, கல்லுாரியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.

வால்பாறை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி நாட்டு நலப்பணி திட்டம் மற்றும் 'மைபாரத்' அமைப்பு இணைந்து, 'வளர்ந்த இந்தியாவிற்கான போதை பொருள் இல்லாத இளைஞர்கள்' என்ற தலைப்பில் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தியது.

கல்லுாரி முதல்வர் ஷீலாபானு தலைமை வகித்தார். வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி உடற்கல்வி ஆசிரியர் ராகவன் கலந்து கொண்டு பேசினார்.

படிக்கும் வயதில் மாணவர்கள் ஆரோக்கியமாக வாழ வேண்டுமானால், போதை பொருட்களை ஒரு போதும் பயன்படுத்தக்கூடாது. சிகரெட் பிடிப்பதால் இருதய நோய் வர அதிக அளவில் வாய்ப்பு உள்ளது. போதை பொருட்களை பயன்படுத்தினால் முளை செயல் இழந்து விடுவதோடு, உடல் நலமும் பாதிக்கப்படும்.

நல்ல ஆரோக்கியமான உணவுகளை உட்கொண்டு, வாழ்க்கையை ரசித்து வாழ கற்றுக்கொள்ளுங்கள். நண்பர்களுடன் ஒன்றாக இணைந்து மது அருந்துவது பிற போதை பொருட்கள் பயன்படுத்த கூடாது. போதை பொருட்கள் எங்கு விற்பனை செய்தாலும் ஆசிரியர்களிடம் தெரிவிக்க வேண்டியது மாணவர்களின் கடமை. சமுதாயத்தை நல்வழிப்படுத்துவதில் மாணவர்களின் பங்கு அதிகம் தேவை, என, தெரிவிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில், நாட்டுநலப்பணி திட்ட அலுவலர்கள் பெரியசாமி, ரூபா, உமாமகேஸ்வரி, சங்கர், முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us