அரசு மகளிர் கல்லுாரி புதிய கட்டடம் எப்போது திறப்பு?
அரசு மகளிர் கல்லுாரி புதிய கட்டடம் எப்போது திறப்பு?
UPDATED : ஜூலை 02, 2024 12:00 AM
ADDED : ஜூலை 02, 2024 08:06 AM
கோவை:
புதிய கல்வியாண்டுக்கான வகுப்புகள் விரைவில் துவங்கவுள்ள சூழலில், மாணவிகளின் நலன் கருதி கோவை, புலியகுளம் அரசு மகளிர் கலை, அறிவியல் கல்லூரியின் புதிய கட்டடத்தை திறக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
கோவையில் மகளிர் அரசு கல்லூரி தேவை என்று நீண்டகாலமாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது. இதைத்தொடர்ந்து, 2020ம் ஆண்டு முதல் புலியகுளம் பகுதியில் மகளிர் அரசு கல்லூரி துவங்கப்பட்டது. இந்த கல்லூரி துவங்கும்போது பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம்., வணிகவியல், பி.எஸ்சி., கணிதம், கணினி அறிவியல் படிப்புகள் மட்டுமே துவங்கப்பட்டது.
ஆனாலும், மாணவிகளுக்கு வகுப்பறை பற்றாக்குறை இருந்து வந்தது. இதைத்தொடர்ந்து, 13.5 கோடி ரூபாய் செலவில் புதிய கட்டடம் கட்டும் பணி கடந்த ஆண்டு துவங்கப்பட்டது. இறுதிகட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
ஜூலை முதல் வாரத்தில் கல்லூரிகள் திறக்கப்படவுள்ள நிலையில், புதிய கட்டடத்தை விரைவில் திறக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது மாணவிகள், பெற்றோரின் கோரிக்கையாக உள்ளது.
கல்லூரி முதல்வர் வீரமணி கூறுகையில், கல்லூரியில் மாணவிகள் சேர்க்கை தீவிரமாக நடந்து வருகிறது. ஜூலை முதல் வாரத்தில் வகுப்புகள் துவங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய கட்டடப் பணிகள் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மின்சார இணைப்பு போன்ற பணிகள் நடைபெற்று வருகின்றன, என்றார்.