தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆற்காடு, பரனுார் வழித்தடத்தில் பள்ளி நேரத்தில் பஸ் இயக்கப்படுமா?

ஆற்காடு, பரனுார் வழித்தடத்தில் பள்ளி நேரத்தில் பஸ் இயக்கப்படுமா?

ஆற்காடு, பரனுார் வழித்தடத்தில் பள்ளி நேரத்தில் பஸ் இயக்கப்படுமா?


UPDATED : நவ 09, 2026 12:39 PM

ADDED : நவ 09, 2026 12:40 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 09, 2026 12:39 PM ADDED : நவ 09, 2026 12:40 PM


Follow on Google
அ நிறம் | அளவு

திருக்கோவிலுார்:
விழுப்புரத்தில் இருந்து ஆற்காடு, பரனுார், புத்துார் வழியாகச் செல்லும் அரசு பஸ் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் பள்ளி மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகின்றனர்.

விழுப்புரத்தில் இருந்து திருக்கோவிலுாருக்கு, ஆயந்துார், ஆற்காடு, பரனுார், புத்துார் வழியாக தினசரி அரசு பஸ் தடம் எண்.153 இயக்கப்படுகிறது. காலை 8:10 மணிக்கு விழுப்புரத்தில் இருந்து புறப்படும் பஸ்சில் குறிப்பாக ஆற்காடு, புத்துார், அரகண்டநல்லுார் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்குச் செல்லும் மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருந்தது.

தற்போது காலை 9:10 மணிக்கு பரனுார் வரவேண்டிய பஸ் 9:50 மணிக்கு வருகிறது. இதனால் குறிப்பாக பரனுார், கீழக்கொண்டூர், மேலக்கொண்டூர், சத்திரம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் புத்துார் அரசு மேல்நிலைப் பள்ளிக்குச் செல்ல காலதாமதம் ஏற்படுவதால் பஸ்சுக்காக காத்திருக்கும் பிள்ளைகளை பெற்றோர்கள் மிகுந்த சிரமங்களுக்கிடையே இருசக்கர வாகனங்களில் அழைத்துச் செல்லும் அவலம் நீடிக்கிறது. இதற்கு வாய்ப்பு இல்லாத மாணவர்கள் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்கும் சூழலும் உருவாகிறது.

விழுப்புரம் போக்குவரத்துக்கழக பணிமனை அதிகாரிகள் இந்த பஸ்சை குறிப்பாக பரனுாருக்கு காலை 09:00 மணிக்கு வரும் வகையில் நேரத்தை மாற்றி அமைத்து மாணவர்களுக்கு பயனுள்ளதாக இருக்க வழிவகை செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us