sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசு பள்ளிகளில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க... ஏற்பாடு செய்யப்படுமா! மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு

/

அரசு பள்ளிகளில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க... ஏற்பாடு செய்யப்படுமா! மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு

அரசு பள்ளிகளில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க... ஏற்பாடு செய்யப்படுமா! மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு

அரசு பள்ளிகளில் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க... ஏற்பாடு செய்யப்படுமா! மாணவர்கள், பெற்றோர் எதிர்பார்ப்பு


UPDATED : பிப் 17, 2026 02:21 PM

ADDED : பிப் 17, 2026 02:23 PM

Google News

UPDATED : பிப் 17, 2026 02:21 PM ADDED : பிப் 17, 2026 02:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
அரசு பள்ளி மாணவர்கள் அவர்கள் பயின்ற பள்ளியிலேயே உயர்கல்விக்கு விண்ணப்பிக்க அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் உள்ள நான்கு பிராந்தியங்களிலும், ஆண்டுதோறும் சராசரியாக 18 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதுகின்றனர். இவர்களில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் உயர்கல்வி நோக்கி அடியெடித்து வைக்க பொதுசேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கின்றனர். இங்கு தான் சிக்கலே எழுகின்றது.

ஒரே நேரத்தில் குவியும் மாணவர்களால் பொது சேவை மையங்கள் ஆண்டுதோறும் திணறுகின்றன. 'இன்று போய் நாளை வா' என்று திருப்பி அனுப்புகின்றனர். இல்லையெனில் அதை கொண்டு வாங்க; இதை கொண்டு வாங்க… இண்டர்நெட் மந்தம் என ஆயிரத்துதெட்டு காரணங்களை சொல்லி பதட்டமடைய செய்கின்றனர்.

இல்லையெனில், மற்ற வேலைகளில் ரொம்ப பிசியா இருக்கோம்; நீங்கள் திங்கள்கிழமை வந்துடுங்களேன் என்று ஒரே பதிலில் திருப்பி அனுப்பிவிடுகின்றனர். இப்படி உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் போது ஒவ்வொரு பெற்றோர், மாணவர்களுக்கு விதவிதமாகன கசப்பான அனுபவங்கள்.

இதனால் மாணவர்களுக்கு மட்டுமின்றி பெற்றோர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படுகின்றது. இருக்கிற வேலைகளை விட்டுவிட்டு அடிக்கடி பொதுசேவை மைய வாசல்களில் தவம் கிடைக்க வேண்டி இருக்கு. ஒவ்வொரு ஆண்டும் இந்த அலைச்சல் தொடர்கதையாக உள்ளது.

எனவே, இந்தாண்டாவது அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்கு அலைச்சல், வீண் பதட்டமின்றி விண்ணப்பிக்க அந்தந்த அரசு பள்ளிகளிலேயே ஏற்பாடு செய்ய வேண்டும் என எதிர்ப்பார்ப்பு மாணவர்கள், பெற்றோர் மத்தியில் மேலெழுந்துள்ளது.

உயர்கல்விக்கு விண்ணப்பிக்கும் அளவிற்கு அரசு பள்ளிகளில் வசதி இருக்கின்றதா என்ற கேள்வி எழலாம். இதற்கான உட்கட்டமைப்பு வசதிகள் அனைத்து அரசு பள்ளிகளில் சூப்பராகவே உள்ளன. கம்ப்யூட்டர்களுடன் ஸ்மார்ட்டாக ஆய்வகங்கள் மிளிருகின்றன.

இது மட்டுமின்றி கம்ப்யூட்டர் சயின்ஸ் ஆசிரியர்களும் கூடவே இருக்கின்றனர். இந்த ஆசிரியர்களை கொண்டு ரொம்ப எளிதாக அரசு பள்ளி மாணவர்கள் உயர்கல்விக்கு எளிதாக விண்ணப்பிக்க செய்ய முடியும்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு உதவ அந்தந்த அரசு பள்ளி ஆசிரியர்களும் ரெடியாகவே உள்ளனர். இதில் மற்ற பள்ளிகளுக்கு முன் மாதிரியாக உழவர்கரை அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 'நீட்' படிக்க விண்ணப்பித்த 3 மாணவர்களுக்கு அரசு பள்ளி ஆசிரியர்களே 5,681 ரூபாய் கொடுத்து விண்ணப்பித்து விட்டனர். அவர்களுக்கு ஸ்பான்சர்ஷிப் மூலம் தலா 15 ஆயிரம் ரூபாய் என 45 ஆயிரம் ரூபாய் கொடுத்து 'நீட்' பயிற்சி அளிக்க ரெடியாகி வருகின்றனர்.

அடுத்து சென்டாக் உயர்கல்விக்கு விண்ணப்பிக்க, அதற்கான ஆயத்த வேலைகளையும் செய்து வருகின்றனர். அரசு ஒரு உத்தரவு போட்டால், இந்த அரசு பள்ளியை போன்று அனைத்து அரசு பள்ளிகளிலும், இது போன்று மாணவர்கள் அலைச்சல், பதட்டம் இல்லாமல் விண்ணப்பிக்க கல்வித் துறை கைகொடுக்க முடியும். இதற்கான உத்தரவை பள்ளி கல்வித் துறைக்கு அரசு பிறப்பிக்க வேண்டும்.

சி.பி.எஸ்.இ., மாணவர்கள் எவ்வளவு பேர்?


மாநிலத்தில் மொத்தம் 735 பள்ளிகள் உள்ளன. இதில் 59 அரசு மேல்நிலைப் பள்ளிகள், 94 அரசு உதவி பெறும் பள்ளிகள், 6 மத்திய அரசு பள்ளிகள் உள்ளன. இவற்றில் புதுச்சேரி, காரைக்காலில் சி.பி.எஸ்.இ., பாடப் பிரிவில் அரசு பள்ளி மாணவர்கள் 5,681; தனியார் பள்ளி மாணவர்கள் 2,938; மத்திய அரசு பள்ளி மாணவர்கள் 383, என மொத்தம் 9,002 பேர் எழுதுகின்றனர்.

நல்ல வழிகாட்டியாக அமையும்


அரசு பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க அரசு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் உயர்கல்வி பயில சென்டாக்கிற்கு விண்ணப்பிக்க வேண்டியுள்ளது.

இதற்கு விண்ணப்ப கட்டணம் இல்லை என்றாலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க பொது சேவை மையங்களுக்கு கட்டணம் ரூ.200 முதல் ரூ.500 வரை செலுத்த வேண்டியுள்ளது.

அரசு பள்ளிகளிலேயே சென்டாக்கிற்கு விண்ணப்பிக்க அரசு உத்தரவிட்டால், ஏழை மாணவர்களின் பெற்றோர்களுக்கு பெரும் சுமை குறையும். மேலும், சென்டாக் விண்ணப்பிப்பதில் மாணவர்களுக்கு ஏற்படும் தேவையற்ற அலைச்சலும் குறையும்.

அனைத்திற்கும் மேலாக ஆசிரியர்களே பதிவு செய்வதால், எந்த மாணவர், எந்த பாடங்களை தேர்வு செய்ய தகுந்த ஆலோசனை வழங்க முடியும்.






      Dinamalar
      Follow us