கே.வி., பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுவரா?
கே.வி., பள்ளிகளில் தமிழாசிரியர்கள் நியமிக்கப்படுவரா?
UPDATED : மார் 05, 2025 12:00 AM
ADDED : மார் 05, 2025 10:54 AM

சென்னை:
தமிழகத்தில் உள்ள கே.வி., எனப்படும், கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், தமிழ் மொழிப்பாடம் கற்பிக்க, தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும் என பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், மத்திய அரசின் சார்பில், 45 கேந்திரிய வித்யாலயா பள்ளி கள் இயங்குகின்றன. இவற்றில், மொழிப்பாடங்களாக, ஹிந்தியும், சமஸ்கிருதமும் கற்பிக்கப்படுகின்றன. தமிழ் கற்பிக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாக உள்ளது.
இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் இலுப்பைக்குடியில் உள்ள பள்ளிகளில், தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற தமிழாசிரியர்கள் தேவை; வரும், 16ம் தேதி நேர்காணல் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவாரூர் பள்ளி சார்பிலும், ஒப்பந்த அடிப்படையில் தமிழாசிரியர் தேவை என, விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.
தற்போது, புதிய தேசிய கல்விக் கொள்கையின் மும்மொழி திட்டத்தின்படி, தமிழகத்தில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, தமிழ்மொழியை கற்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
எனவே, அனைத்து பள்ளிகளிலும் தமிழாசிரியர்களை நியமிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.