UPDATED : டிச 14, 2025 09:10 AM
ADDED : டிச 14, 2025 09:12 AM

சென்னை:
''தமிழகத்தில் ஆறு மாவட்டங்களில், மருத்துவ கல்லுாரி துவக்க அனுமதிக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்,'' என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.
அமைச்சர் அளித்த பேட்டி:
மாவட்டத்திற்கு ஒரு மருத்துவ கல்லுாரி அமைக்க வேண்டும் என, 2009ல், 11 மருத்துவ கல்லுாரிகளுக்கான நிலம் கையகப்படுத்த அரசாணைகள் வெளியிடப்பட்டன. கருணாநிதி ஆட்சியில் நடந்த இப்பணிகள், அ.தி.மு.க., ஆட்சியில் இழுத்தடித்து, ஆட்சி முடியும்போது துவக்கி வைத்தனர்.
ஆனால், தி.மு.க., ஆட்சிக்கு பின், நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான கட்டட பணிகள் முழுமை பெற்றன. புதிதாக உருவாக்கப்பட்ட பெரம்பலுார், தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்துார், மயிலாடுதுறை, காஞ்சிபுரம் ஆகிய ஆறு மாவட்டங்களில் மருத்துவ கல்லுாரி வேண்டும் என, மத்திய அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்; இன்னும் அனுமதி கிடைக்கவில்லை.
இவ்வாறு அவர் பேசினார்.

