UPDATED : ஜன 04, 2025 12:00 AM
ADDED : ஜன 04, 2025 10:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பரங்கிப்பேட்டை:
பு.முட்லுாரில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலை வேளாண் புல இறுதியாண்டு மாணவிகள் ஊரக வேளாண் பணி அனுபவத்திற்கான துவக்க விழா நடந்தது.
ஊராட்சி தலைவர் ஜெயசீலன் தலைமை தாங்கினார். இணை பேராசிரியர் சண்முகராஜா முன்னிலை வகித்தார். குழு தலைவி தர்ஷன ரகஷிதா வரவேற்றார். பி.டி.ஓ.,க்கள் சதீஷ்குமார், பிரேமா பேசினர். மாணவிகள் தேவதர்ஷினி, திவ்யா, திவ்யாபாரதி, த.திவ்யா, அ.திவ்யா, இலக்கியா, இலக்கியபிரியா, இளம்பூரணி, இளஞ்செழி, இளஞ்தென்றல் பங் கேற்றனர். துணை தலைவி இளமதி நன்றி கூறினார்.