sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சுழற்சி முறையில் ஆசிரியர்களுக்கு பணி

சுழற்சி முறையில் ஆசிரியர்களுக்கு பணி

சுழற்சி முறையில் ஆசிரியர்களுக்கு பணி


UPDATED : ஏப் 24, 2024 12:00 AM

ADDED : ஏப் 24, 2024 12:23 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 24, 2024 12:00 AM ADDED : ஏப் 24, 2024 12:23 PM


Follow on GoogleFavourite on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி:
பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், அரசு பள்ளி மாணவர்களுக்கான கோடை விடுமுறை நாளை துவங்குகிறது. வரும், 26ம் தேதி வரை, ஆசிரியர்கள் பள்ளிக்கு வர அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

அதேநேரம், தலைமையாசிரியர்கள், விடுமுறை நாட்களில் பள்ளிக்கு வருகை புரிய உள்ளனர். விடைத்தாள் திருத்தம், வருகைப் பதிவேட்டை சரிசெய்தல், தேர்வு முடிவுகளை தயார் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளவும் உள்ளனர். இதற்காக, ஆசிரியர்கள், சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்கப்படவும் உள்ளனர்.

இதுகுறித்து, பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறுகையில், மே மாதத்தில், 10, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும். தற்போது ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதேபோல, மாணவர் சேர்க்கையும் நடத்தப்படும். இதனால், ஒரு ஆசிரியர், இரு நாட்கள் வீதம் சுழற்சி முறையில் பள்ளிக்கு வரவழைக்கப்படுவர் என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us