UPDATED : ஜன 30, 2025 12:00 AM
ADDED : ஜன 30, 2025 07:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
மணப்பட்டு அரசு நடுநிலைப் பள்ளியில் தேசிய பசுமைபடை சார்பில் உலக கல்வி தினயொட்டி, பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா நடந்தது.
ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றார். தலைமை ஆசிரியர் அரிவரதன் தலைமை தாங்கி, மாணவர்களின் முன்னேற்றத்திற்கு கல்வியின் அவசியம் குறித்து பேசினார்.
ஆசிரியை மஞ்சு மாணவர்களுக்கான அரசின் கல்வி வளர்ச்சி திட்டங்கள் குறித்து விளக்கினார். ஆசிரியர் விவேகானந்தன் வாழ்த்தி பேசினார். விழாவையொட்டி நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியை பானுபிரியா நன்றி கூறினார்.
ஏற்பாடுகளை ஆசிரியர்கள் ஏகதேவி, முருகன்,சுஜித் ஜெயன் அலெக்ஸ், ரவீனா,மதிவதனி, அன்பரசி ஆகியோர் செய்திருந்தனர்.