UPDATED : ஜன 30, 2025 12:00 AM
ADDED : ஜன 30, 2025 07:34 AM
வால்பாறை:
சென்னையில் நடந்த குடியரசு தின விழாவில், வால்பாறை அரசு மருத்துவமனை டாக்டருக்கு, சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டது.
வால்பாறை அரசு மருத்துவமனையின், சேவையை பாராட்டி மத்திய அரசு கடந்த வாரம் தேசிய தரச்சான்று வழங்கியது. தொடர்ந்து இரண்டாவது முறையாக தேசிய தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வால்பாறையில் சிறப்பாக பணியாற்றிய மருத்துவமனை தலைமை டாக்டர் நித்யாவிற்கு, தமிழக அளவில் சிறந்த மருத்துவர் விருது வழங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடந்த குடியரசு தினவிழாவில், மருத்துவம் மற்றும் கிராமப்புற சுகாதார இயக்குனர் ராஜமூர்த்தி, விருதை வழங்கினார்.
தமிழகத்தில் மொத்தம், 60 அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில், வால்பாறை, சூலுார் ஆகிய அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.