தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவ, மாணவியருக்கு உலக சிக்கன நாள் போட்டி

மாணவ, மாணவியருக்கு உலக சிக்கன நாள் போட்டி

மாணவ, மாணவியருக்கு உலக சிக்கன நாள் போட்டி


UPDATED : அக் 30, 2026 06:12 PM

ADDED : அக் 30, 2026 06:13 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 06:12 PM ADDED : அக் 30, 2026 06:13 PM


Follow on Google
அ நிறம் | அளவு

நாமக்கல்:
நாமக்கல்லில் மாணவ, மாணவியருக்காக, உலக சிக்கன நாளை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடந்தன.

சிக்கன சிறு சேமிப்பு துறை சார்பில், நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கலையரங்கில், 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் பள்ளி மாணவ, மாணவியருக்கான மாவட்ட அளவிலான கட்டுரை, கவிதை, பேச்சு போட்டி மற்றும் சொற்றொடர் போட்டி நடந்தது.

மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மாதவன் துவக்கி வைத்தார். கட்டுரை போட்டியில், 24 பேரும், கவிதை போட்டியில், 20 பேரும், பேச்சு போட்டியில், 26 பேரும், சொற்றொடர் போட்டியில், 18 பேரும் பங்கேற்றனர்.

போட்டிகளை மாவட்ட சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் திருஞானம் ஒருங்கிணைத்தார். சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் அப்துல் வக்காப், இடைநிலை உதவியாளர் சந்திரசேகர், அரசு உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் பொன்னுசாமி, சாந்தி மற்றும் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த ஆசிரியர்கள், நடுவர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us