தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

பிளஸ் 2 விடைத்தாள் நகல் இன்று முதல் விண்ணப்பிக்கலாம்


UPDATED : மே 13, 2025 12:00 AM

ADDED : மே 13, 2025 10:21 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 13, 2025 12:00 AM ADDED : மே 13, 2025 10:21 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்பூர்:
பிளஸ் 2 தேர்வெழுதிய மாணவ, மாணவியர்களின் விடைத்தாள் நகல் பெற விரும்புவோர் இன்று முதல் விண்ணப்பிக்கலாம். மாணவ, மாணவியர் தங்கள் படித்த பள்ளியிலும், தனித்தேர்வர்கள் தேர்வெழுதிய தேர்வு மைய பொறுப்பாளர்கள் வாயிலாகவும் வரும், 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

அனைத்து பாடங்களுக்கும் சேர்த்து கட்டணம், 275 ரூபாய். நடப்பாண்டு முதல் நேரடியாக மறுகூட்டல் விண்ணப்பிக்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால், தேர்வர்கள் விடைத்தாள் நகல் பெற்ற பின், மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவ, மாணவியர் உடனடியாக உயர்கல்வியை தொடர ஏதுவாக ஜூன், 25 - ஜூலை 2 வரை துணைத் தேர்வு நடத்தப்படுகிறது. நடந்த முடிந்த பிளஸ் 2 தேர்வில் தோல்வியை தழுவியவர்கள் துணைத்தேர்வு எழுத நாளை (14ம் தேதி) முதல் விண்ணப்பிக்கலாம். விவரங்களை அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என மாவட்ட கல்வித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us