UPDATED : மே 10, 2024 12:00 AM
ADDED : மே 10, 2024 04:57 PM

சென்னை:
கடந்த ஏப்ரல் மாதம் 10ம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் 13ம் தேதி முதல் தங்களுடைய தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
மாணவர்கள் தங்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை தங்கள் பள்ளி தலிமை ஆசிரியர் வாயிலாகவோ அல்லது https://dge.tn.gov.in/ என்ற இணையதளத்தின் மூலமாகவோ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தனித்தேர்வர்களும் இதே இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல்
விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும் மாணவர்கள், தாங்கள் பயின்ற பள்ளி வையாகவும், தனித் தேர்வர்கள் தங்களுடைய தேர்வு மையம் வழியாகவும் வரும் 15ம் தேதி (புதன்கிழமை) காலை 11 மணி முதல் 20ம் தேதி (திங்கட்கிழமை) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். பத்தாம் வகுப்பு ஸ்கேன் காப்பிக்கு விண்ணப்பிப்பவர்கள் மட்டுமே மறுகீட்டல் மற்றும் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க இயலும்.
விடைத்தாள் நகல் பெறுவதற்கான கட்டணம் ஒவ்வொரு பாடத்திற்கும் ரூ.275. தேர்வர்கள் விடைத்தாள்களின் நகலிற்கான கட்டணத்தை விண்ணப்பிக்கவுள்ள பள்ளியிலேயே பணமாக செலுத்த வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.