10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: முழு விபரம் இதோ!
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதி அறிவிப்பு: முழு விபரம் இதோ!
UPDATED : நவ 04, 2025 11:57 AM
ADDED : நவ 04, 2025 11:46 AM

சென்னை: தமிழகத்தில் 10,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை இன்று (நவ., 04) அமைச்சர் மகேஷ் வெளியிட்டார்.
சென்னை கோட்டூர்புரத்தில் இன்று 10,12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தேதி அட்டவணையை பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் வெளியிட்டார். அப்போது, 11ம் வகுப்பு அரியர் தேர்வுகளுக்கான தேதியும் அறிவிக்கப்பட்டது.
12ம் வகுப்பு தேர்வு
 
12ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 2ம் தேதி தொடங்கி மார்ச் 26ம் தேதி நிறைவடைய உள்ளது. 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8ம் தேதி வெளியிடப்படும். இந்த ஆண்டு பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்கள் 8.7 லட்சம் பேர் பொதுதேர்வு எழுத உள்ளனர். செய்முறை தேர்வு பிப்ரவரி 9ம் தேதி தொடங்கி 16ம் தேதி வரை நடைபெற உள்ளது.
10ம் வகுப்பு தேர்வு
 
10ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 11ம் தேதி தொடங்கி ஏப்ரல் 06ம் தேதி வரை நடைபெற உள்ளது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மே 5ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியாகும்.
இது குறித்து நிருபர்கள் சந்திப்பில் அமைச்சர் மகேஷ் கூறியதாவது: ''தேர்தல் கமிஷனுடன் கலந்து ஆலோசித்த பின்னர் தான் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு தேதியை அறிவித்துள்ளோம். 12ம் வகுப்பு கணக்குப்பதிவியல் தேர்விற்கு மட்டும் கால்குலேட்டர் எடுத்து செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
மாணவர்கள் நீண்ட கால கோரிக்கை என்ற அடிப்படையில் இந்த ஆண்டு கணக்கு பதிவியல் தேர்வில் கால்குலேட்டருக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. மாணவர்கள் பதற்றம் இல்லாமல், உற்சாகத்துடன் பொதுத்தேர்வுகளை எழுத வேண்டும். இவ்வாறு அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.
என்னென்ன தேர்வுகள் எப்பொழுது?
 
10ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்
 
* 11.03.2026- தமிழ், இதர மொழிப்பாடங்கள்
* 16.03.2026- ஆங்கிலம்
* 25.03.2026- கணிதம்
* 30.03.2026- அறிவியல்
* 02.04.2026- சமூக அறிவியல்
* 06.04.2026- விருப்ப மொழிப்பாடங்கள்.
12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள்!
 
* 02.03.2026- தமிழ் மற்றும் இதர மொழிப்பாடங்கள்.
* 05.03.2026- ஆங்கிலம்.
* 09.03.2026- வேதியியல், கணக்குப்பதிவியல், புவியியல்.
* 13.03.2026- இயற்பியல், பொருளியல், வேலை வாய்ப்பு திறன்கள்.
17.03.2026- கணிதம், விலங்கியல், வணிகவியல், நுண்ணுயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை, டெக்ஸ்டைல் & டிரஸ் டிசைனிங், உணவு சேவை மேலாண்மை, நர்சிங்.
23.03.2026- உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம் & புள்ளியியல், அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங், அடிப்படை சிவில் இன்ஜினியரிங், அடிப்படை ஆட்டோமொபைல் இன்ஜினியரிங், அடிப்படை மெக்கானிக்கல் இன்ஜினியரிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை மற்றும் செயலகம்.
26.03.2026- ஆங்கிலம், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், கணினி அறிவியல், கணினி பயன்பாடுகள், உயிர் வேதியியல், மேம்பட்ட மொழி (தமிழ்), வீட்டு அறிவியல், அரசியல் அறிவியல், புள்ளியியல், நர்சிங் (தொழில்முறை) அடிப்படை எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங்.

