வன்முறையை கைவிட்ட நக்சல்கள்: மஹாராஷ்டிரா டிஜிபி முன்னிலையில் 11 பேர் சரண்
வன்முறையை கைவிட்ட நக்சல்கள்: மஹாராஷ்டிரா டிஜிபி முன்னிலையில் 11 பேர் சரண்
ADDED : டிச 10, 2025 09:45 PM

கட்சிரோலி: மஹாராஷ்டிராவில் டிஜிபி முன்னிலையில் நக்சல்கள் 11 பேர் இன்று சரண் அடைந்தனர்.
நாடு முழுவதும் நக்சல்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதில் மத்திய அரசு தொடர்ந்து முன்னேறி வருகிறது. 2026 மார்ச்சுக்குள் நக்சல்கள் இல்லாத மாநிலங்களை உருவாக்கும் வகையில் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில் இன்று மஹாராஷ்டிராவில் டிஜிபி ராஷ்மி சுக்லா முன்னிலையில் 11 நக்சல்கள் தங்கள் ஆயுதங்களை ஒப்படைத்துவிட்டு வன்முறை பாதையில் இருந்து விலகி உள்ளனர். சரண் அடைந்த 11 பேருக்கும் ஒட்டு மொத்தமாக ரூ.82 லட்சம் பரிசுத்தொகை அறிவிக்கப்பட்டு இருந்தது.
சரண் அடைந்தவர்களில் முக்கியமானவர்கள் ரமேஷ் (எ) பிமா (எ) பஜூ குட்டி லெகாமி மற்றும் சிட்டு (எ) கிரண் ஹித்மா கோவசி. இவர்களில் லெகாமி என்பவன் 2004ம் ஆண்டு முதல் நக்சல் இயக்கத்தில் தீவிரமாக இறங்கி செயல்பட்டு வந்தவன்.
நடப்பு ஆண்டில் மட்டும் மஹாராஷ்டிராவுக்கு உட்பட்ட கட்சிரோலி போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் மொத்தம் 112 நக்சல்கள் சரண் அடைந்துள்ளனர்.

