பொறுப்பு டிஜிபி பதவி: அபய் குமார் சிங்கிற்கு கூடுதலாக ஒப்படைப்பு
பொறுப்பு டிஜிபி பதவி: அபய் குமார் சிங்கிற்கு கூடுதலாக ஒப்படைப்பு
ADDED : டிச 10, 2025 10:01 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: பொறுப்பு டிஜிபி வெங்கட்ராமன் மருத்துவ விடுப்பு காரணமாக அந்தப் பதவி லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக உள்ள அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
தமிழக டிஜிபியாக இருந்த சங்கர் ஜிவால் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து பொறுப்பு டிஜிபி ஆக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். நேற்று நெஞ்சுவலி காரணமாக சென்னை கிண்டியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
வெங்கட்ராமன் 15 நாள் மருத்துவ விடுப்பில் உள்ளார். இதனையடுத்து பொறுப்பு டிஜிபி பதவி அபய்குமார் சிங்கிற்கு கூடுதல் பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.
தற்போது அபய்குமார் சிங் லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக பதவியில் உள்ளார்.

