இந்திய கடல் பகுதியில் 11 பாகிஸ்தானிய மீனவர்கள் கைது
இந்திய கடல் பகுதியில் 11 பாகிஸ்தானிய மீனவர்கள் கைது
ADDED : டிச 11, 2025 04:07 PM

கட்ச்: இந்திய கடல் எல்லைக்குள் அனுமதியின்றி வந்த பாகிஸ்தான் மீனவர்கள் 11 பேரை கடலோர காவல்படையினர் கைது செய்தனர்.
குஜராத் மாநிலம் கட்ச் மாவட்டத்தை ஒட்டிய கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது பாகிஸ்தானிய படகு ஒன்று அனுமதியின்றி இந்திய கடல் எல்லைக்குள் வந்ததை கண்ட அவர்கள் படகை சுற்றிவளைத்தனர்.
'அல் வாலி ' எனப் பெயரிடப்பட்ட அந்த படகை சோதனை செய்த கடலோர காவல்படையினர், அதில் இருந்த 11 பாகிஸ்தான் மீனவர்களை கைது செய்து, ஜகாவு துறைமுகத்துக்கு அந்த படகுடன் மீனவர்களையும் அழைத்து வந்த கடலோர காவல்படையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். படகில் வேறு ஏதும் உள்ளதா என சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பயங்கரவாத அமைப்புகள் சதித்திட்டம் தீட்டி வருவதாக நமது உளவுத்துறையினர் எச்சரித்துள்ள நிலையில் அந்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

