பாகிஸ்தான் பள்ளிக்கே செல்லாத 2.5 கோடி குழந்தைகள்
பாகிஸ்தான் பள்ளிக்கே செல்லாத 2.5 கோடி குழந்தைகள்
ADDED : நவ 16, 2025 11:25 PM

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில், இரண்டரை கோடி குழந்தைகள், படிப்பை பாதியில் நிறுத்திஉள்ளனர் என்பதும், அவர்களில் 2 கோடி பேர் பள்ளிக்கே சென்றதில்லை என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், 2023 நிலவரப்படி, மக்கள் தொகை எண்ணிக்கை, 24.15 கோடியாக உள்ளது.
இந்நிலையில், அரசு அமைப்பான பாக்., கல்வி நிறுவனம் புதிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், 2.5 கோடி குழந்தைகள் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதில், 2 கோடி குழந்தைகள் பள்ளிக்கே சென்றதில்லை என்பது தெரிய வந்துள்ளது.
மாகாண வாரியாக பள்ளிக்கு செல்லாத குழந்தைகளின் எண்ணிக்கை வெளியிடப் பட்டுள்ளது. பஞ்சாபில் 90 லட்சம், சிந்துவில் 80 லட்சம், கைபர் பக்துங்க்வாவில் 50 லட்சம், பலுசிஸ்தானில் 30 லட்சம் குழந்தைகள் கல்வி கற்காமல் இருக்கின்றனர்.
தலைநகர் இஸ்லாமாபாதிலும் 6 முதல் 16 வயதுக்குட்பட்ட 89,000 சிறார்கள் பள்ளிக்கு செல்லவில்லை. 1,084 திருநங்கை குழந்தைகளை எந்தக் கல்வி நிறுவனத்திலும் சேர்க்கப் படவில்லை என, அறிக்கை கூறுகிறது.

