உள்ளடக்கத்திற்கு செல்ல

UPDATED : நவ 05, 2026 07:39 PM
ADDED : நவ 05, 2026 05:07 PM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூர் வேடர்பள்ளி பகுதியில் பாலாஜி டூல்ஸ் என்ற தனியார் தொழிற்சாலைக்கு நுழைவு வாயில் அமைக்கும் பணி நடந்தது. ஆர்ச் அமைக்க கான்கிரீட் போடப்பட்டது. பணி முடிந்த நிலையில் அது திடீரென இடிந்து விழுந்தது. இதில் 8 தொழிலாளர்கள் சிக்கினர்.
அதில் குமரேசன், மைக்கேல், சீனு ஆகியோர் உயிரிழந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.
சிறப்பு நேரலை
ஒசூரில் ஆர்ச் விழுந்தது குறித்த சிறப்பு செய்தி தினமலர் இணையதளம் மற்றும் யூடியூப் பக்கத்தில் நேரலை செய்யப்பட்டது.
