UPDATED : நவ 05, 2026 02:49 AM
ADDED : நவ 05, 2026 02:24 AM

அ நிறம் | அளவு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த மாதம், 10 நாட்கள் லேசானது முதல் கனமழை பெய்தது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக மழையின்றி வெப்பம் வாட்டி வந்த நிலையில், நேற்று மாலை, கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.இதனால், பழையபேட்டை டவுன் பஸ் ஸ்டாண்ட், 5 ரோடு ரவுண்டானாவில் பெங்களூரு சாலை, ஆவின் மேம்பாலம், காந்தி நகர் சர்வீஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் தேங்கியது.
இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகினர். ஒரு மணி நேரம் இடி மின்னலுடன் மழை பெய்து, குளிர்ந்த சீதோஷ்ண நிலை நிலவியதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
