குப்பை கிடங்கை அகற்றக்கோரி பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
குப்பை கிடங்கை அகற்றக்கோரி பி.டி.ஓ., அலுவலகம் முற்றுகை
ADDED : நவ 05, 2026 02:23 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கட்டி
கானப்பள்ளி பஞ்., தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் பகுதி-2ல் அமைந்துள்ள குப்பை கிடங்கை அகற்றக்கோரி, மா.கம்யூ., கட்சி சார்பில், நேற்று முகக்கவசம் அணிந்து பி.டி.ஓ., அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடந்தது.
வட்ட செயலாளர் பெரியசாமி தலைமை வகித்தார். மாநில குழு உறுப்பினர் பத்ரி, மாவட்ட செயலாளர் சுரேஷ், மாவட்ட செயற்குழு உறுப்பினர் லெனின் முருகன் ஆகியோர் கோரிக்கை குறித்து பேசினர்.தர்ணா போராட்டத்தில், குடியிருப்பு பகுதியில் குப்பை கொட்டுவதை நிரந்தரமாக நிறுத்தி, குப்பை கிடங்கை உடனடியாக வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும். குப்பை அகற்றப்பட்ட அந்த இடத்தை மீட்டு, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக சிறுவர் பூங்கா மற்றும் நடைபாதை அமைத்துத்தர வேண்டும். பாதிக்கப்பட்ட பகுதியில் உடனடியாக முழுமையான சுகாதார பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். உயர்மட்ட அதிகாரிகள் நேரடியாக ஆய்வு செய்து நிரந்தர தீர்வை, உறுதி செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, 2 மணி நேரம் கண்டன கோஷங்களை எழுப்பினர்.
