மற்றவர்களுக்கு பாடம் எடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை: இந்தியா பதிலடி
மற்றவர்களுக்கு பாடம் எடுக்க பாகிஸ்தானுக்கு உரிமை இல்லை: இந்தியா பதிலடி
UPDATED : நவ 26, 2025 08:39 PM
ADDED : நவ 26, 2025 08:00 PM

புதுடில்லி: சிறுபான்மையினரை மோசமாக நடத்துவதில் ஆழமான கறை படிந்த வரலாற்றை கொண்ட பாகிஸ்தான் மற்ற நாடுகளுக்கு பாடம் எடுக்க எந்த உரிமையும் இல்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உத்தர பிரதேசத்தில், அயோத்தி ராமர் கோவிலில் நேற்று பிரதமர் மோடி காவிக்கொடி ஏற்றினார். இது குறித்து பாகிஸ்தான் விமர்சனம் செய்திருந்தது.
இதற்கு பதிலளித்த மத்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரன்தீர் ஜெயிஸ்வால் கூறியதாவது: பாகிஸ்தான் தெரிவித்த கருத்துகளை அறிந்துள்ளோம். அவற்றை நிராகரிக்கிறோம். மதவெறி, அடக்குமுறை மற்றும் சிறுபான்மையினரை மோசமாக நடத்துவதில் ஆழமான கறை படிந்த வரலாறை கொண்ட நாடாக உள்ள பாகிஸ்தான், மற்றவர்களுக்கு பாடம் எடுக்க எந்த தார்மீக உரிமையும் இல்லை. பாசாங்குத்தனமான உபதேசங்களை வழங்குவதற்கு பதில், பாகிஸ்தான் தனது கவனத்தை திருப்பி, சொந்த நாட்டில் நடக்கும் மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்து கவனம் செலுத்துவது நல்லது. இவ்வாறு அவர் கூறினார்.

