இண்டிகோ விமான சேவை முடங்கிய விவகாரம்; 4 அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது டி.ஜி.சி.ஏ.,
இண்டிகோ விமான சேவை முடங்கிய விவகாரம்; 4 அதிகாரிகளை பணிநீக்கம் செய்தது டி.ஜி.சி.ஏ.,
ADDED : டிச 12, 2025 01:07 PM

புதுடில்லி: இண்டிகோ விமான சேவைகளை மேற்பார்வையிடும் விமான செயல்பாட்டு ஆய்வாளர்கள் (FOI) 4 பேரை பணிநீக்கம் செய்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய அரசின் புதிய விதிமுறைகளை புறந்தள்ளிய இண்டிகோ விமான நிறுவனம் கடும் நெருக்கடியில் இருக்கிறது. போதிய விமானிகள் இல்லாத சூழலில், 10 நாட்களுக்கும் மேலாக விமான சேவைகளை இண்டிகோ நிறுவனம் ரத்து செய்து வருகிறது. விமான நிறுவனத்தின் செயல்பாட்டு பிரச்னையால், இண்டிகோவின் 10 சதவீத விமான சேவை குறைக்கப்பட்டுள்ளது.
விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது தொடர்பாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரம் பார்லிமென்ட் வரை எதிரொலித்தது.
இந்த நிலையில், இண்டிகோ விமான சேவைகளை மேற்பார்வையிடும் விமான செயல்பாட்டு ஆய்வாளர்கள் 4 பேரை பணிநீக்கம் செய்து விமானப் போக்குவரத்து இயக்குநரகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இண்டிகோ விமான சேவைகள் முடங்கிய விவகாரத்தில் தொடர்புடைய விமான செயல்பாட்டு ஆய்வாளர்கள் ரிஷி ராஜ் சாட்டர்ஜி, சீமா ஜாம்னானி, அனில் குமார் போகரியல், பிரியம் கவுசிக், ஆகியோரின் ஒப்பந்தங்களை ரத்து செய்வதாக டிஜிசிஏ அறிக்கை வெளியிட்டுள்ளது.

