தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/இந்தியா/சுயசரிதையில் 55 தவறுகள்: மன்னிப்பு கோருவாரா சோனியா?

சுயசரிதையில் 55 தவறுகள்: மன்னிப்பு கோருவாரா சோனியா?

சுயசரிதையில் 55 தவறுகள்: மன்னிப்பு கோருவாரா சோனியா?

22


ADDED : நவ 15, 2026 01:32 AM

Follow on GoogleFavourite on Google

22

ADDED : நவ 15, 2026 01:32 AM


22
Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: டில்லியில் இப்போது மிகவும் பரபரப்பாக பேசப்படும் விஷயம், காங்., - பார்லி., குழு தலைவர் சோனியாவின் சுயசரிதை புத்தகம் தான். கடந்த, 10ல் வெளியான இந்த புத்தகம் விமர்சனத்துக்குள்ளாகி உள்ளது. மொத்தம், 544 பக்கங்களை உடைய இந்த சுயசரிதையில், 55 தவறுகள் உள்ளன. பல நிகழ்வுகளின் தேதிகள் தவறாக எழுதப்பட்டுள்ளன. பார்லி.,க்கு எப்படி ராஜ்யசபா எம்.பி.,க்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர் என்பதை தவறாக எழுதியுள்ளார் சோனியா. 'இது கூட தெரியாமல் இத்தனை ஆண்டுகள் எம்.பி.,யாக இருந்துள்ளார் சோனியா' என, விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன.

காங்கிரசிலிருந்து ஜனாதிபதியான கே.ஆர்.நாராயணன் பெயரை, ஆர்.கே.நாராயணன் என, எழுதியுள்ளார் சோனியா. இந்த நாராயணன், மறைந்த பிரபல ஆங்கில எழுத்தாளர். தன் கணவர் மறைந்த ராஜிவ் சம்பந்தப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்தும் சோனியா அதிகம் எழுதவில்லை. இந்த ஊழலில் பேசப்பட்ட, இத்தாலிய தொழிலதிபர் குவாத்ரோச்சி குறித்தும் வாய் திறக்கவில்லை. முதலில், இந்த புத்தகத்தை வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டது, 'பெங்குயின்' நிறுவனம். 'உங்கள் புத்தகத்தில் உள்ள சில விஷயங்கள் உண்மையானதா என, சரிபார்க்க வேண்டும்' என, பெங்குயின் நிறுவனம் கேட்டது. ஆனால், இதற்கு சோனியா மறுத்து விடவே, 'ஹார்ப்பர் கோலின்ஸ்' பதிப்பகம், சோனியாவின் புத்தகத்தை வெளியிட்டது.

புத்தகம் வெளியாகி விட்டாலும், டில்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், புத்தக வெளியீட்டு விழா நாளை நடக்கிறது. இதில், சோனியா, அவரது மகனும், லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல், அவரது மகளும், எம்.பி.,யுமான பிரியங்கா உட்பட பல பிரபலங்களும் பங்கேற்கின்றனர். அப்போது, தன் புத்தகத்தில் ஏற்பட்ட தவறுகளுக்கு சோனியா மன்னிப்பு கோருவார் என, சொல்லப்படுகிறது. 1,299 ரூபாய் விலையுள்ள இந்த புத்தகம், ஆன்லைனில், 998 ரூபாய்க்கு கிடைக்கிறது. இப்போது இலவசமாக, 'வாட்ஸாப்' குரூப்களில் பி.டி.எப்., வடிவத்தில் பகிரப்பட்டு வருகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us