கொலை செய்யப்பட்டதாக கூறப்பட வாலிபர் விபத்தில் சாவு: போலீசார் விசாரணையில் திருப்பம்
கொலை செய்யப்பட்டதாக கூறப்பட வாலிபர் விபத்தில் சாவு: போலீசார் விசாரணையில் திருப்பம்
UPDATED : நவ 15, 2026 01:27 AM
ADDED : நவ 15, 2026 01:25 AM
புதுச்சேரி: விடுதி மேலாளர் கொலை செய்யப்பட்டதாக கூறப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக அவர், அடையாளம் தெரியாத வாகனம் மோதி இறந்தது போலீசார் விசாரணையில் தெரிய வந்தது.
ரோடியர்பேட் பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன், 27; தனியார் விடுதி மேலாளர். இவர் கடந்த 2ம் தேதி இரவு வாணரப்பேட்டை கல்லறை வீதி வழியாக மாமியார் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
அப்போது கோவிந்த செட்டியார் தோட்டம் பகுதி சாலையில் அவர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். தகவலறிந்து வந்த முதலியார்பேட்டை போலீசார் தமிழ்செல்வன் மர்ம நபர்களால் கொலை செய்யபட்டு இருக்கலாம் என்ற கோனத்தில் விசாரித்தனர். இது தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சந்தேகத்தின் பேரில் 80க்கும் மேற்பட்டவர்களை பிடித்து விசாரித்தனர். இந்நிலையில் தமிழ்செல்வன் அடையாளம் தெரியாத வாகன மோதி இறந்தது விசாரணையில் தெரியவந்தது. இது தொடர்பாக முதலியார்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
