60 பள்ளிகளில் மாணவர்களே இல்லை: அறிக்கையில் தகவல்
60 பள்ளிகளில் மாணவர்களே இல்லை: அறிக்கையில் தகவல்
ADDED : ஜூலை 09, 2026 10:26 PM

சென்னை: தமிழகத்தில் 60 பள்ளிகளில், மாணவர்களே இல்லை என, 'யூடிஸ்' அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய கல்வித்துறையின், கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்ட தகவல் முறைமையான 'யூடிஸ்' சமீபத்தில் 2025 - 26ம் கல்வியாண்டின் அறிக்கையை வெளியிட்டது.
அதில் கூறியிருப்பதாவது:
* தமிழகத்தில், 60 பள்ளிகளில் மாணவர்களே இல்லை
* மாணவர்களே இல்லாத, 40 பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்
* தமிழகத்தில், 3,957 பள்ளிகள், ஒற்றை ஆசிரியர் பள்ளிகளாக இயங்கி வருகின்றன
* ஒற்றை ஆசிரியர் பள்ளிகளில், 82,718 மாணவ, மாணவியர் பயின்று வருகின்றனர்
* தமிழகத்தில் 57,566 பள்ளிகளில், 3,496 பள்ளிகளில் மட்டுமே, சூரிய ஒளி மின்சார வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது
* மொத்தமுள்ள 37,539 அரசு பள்ளிகளில், 27,634 பள்ளிகளில் மட்டும், சிறப்பு கவனம் தேவைப்படும் குழந்தைகளுக்கான கழிப்பறை வசதிகள் உள்ளன.
