தமிழ் பல்கலை வலைதளத்தில் எம்.ஜி.ஆர்., பெயர் சேர்ப்பு
தமிழ் பல்கலை வலைதளத்தில் எம்.ஜி.ஆர்., பெயர் சேர்ப்பு
ADDED : ஜன 09, 2026 01:38 AM

தஞ்சாவூர்: தமிழ் பல்கலையை தோற்றுவித்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயர், பல்கலை வலைதளத்தில் நீக்கப்பட்டதால் ஏற்பட்ட சர்ச்சையை அடுத்து, தற்போது அவரது பெயர் சேர்க்கப்பட்டுள்ளது.
தஞ்சாவூர், தமிழ் பல்கலை, 1981 செப்., 15ல் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்டது.
இந்நிலையில், பல்கலை வலைதளத்தில், நோக்கு, போக்கு, செயல் பக்கத்தில் தமிழ் பல்கலை, 1981ல் அறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்., 15ல் தோற்றுவிக்கப்பட்டது என குறிப்பிட்டு இருந்தது. ஆனால், பல்கலையை தோற்றுவித்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயர் மற்றும் படங்கள் எங்கும் இடம் பெறவில்லை.
இது தொடர்பாக நம் நாளிதழில், ஜன., 1ல் செய்தி வெளியானது. இதையடுத்து அ.தி.மு.க., பொதுச்செயலர் பழனிசாமி உட்பட பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.
இதன்பின், பல்கலை வலைதளத்தின் வரலாற்று பக்கத்தில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயர் சேர்க்கப்பட்டுள்ளது. இதற்கு பலரும் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.

