வட கிழக்கு பருவமழை சராசரியாக பொழியும் வேளாண் பல்கலை கணிப்பு
வட கிழக்கு பருவமழை சராசரியாக பொழியும் வேளாண் பல்கலை கணிப்பு
UPDATED : அக் 02, 2025 05:18 AM
ADDED : அக் 02, 2025 05:17 AM

கோவை: கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலை வெளியிட்டுள்ள அறிக்கை:
அக்., முதல் டிச., வரையிலான வட கிழக்கு பருவமழை முன்னறிவிப்பு தொடர்பான ஆய்வு, வேளாண் பல்கலையில் உள்ள வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்ககத்தில் மேற்கொள்ளப்பட்டது.
சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் கரூர் மாவட்டங்களில் சராசரிக்கு ஒட்டிய மழையும், பிற மாவட்டங்களில் சராசரி மழையளவும் எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னையின் சராசரி மழையளவு 810 மி.மீ., எதிர்பார்க்கப்படும் மழையளவு 890 மி.மீ., கரூர் மாவட்டத்தில், 15 சதவீதம், கிருஷ்ணகிரியில் 14, சேலம் 12 சதவீதம் குறைவாக பொழியும். விழுப்புரம், திருப்பத்துார், திருச்சி, கள்ளக்குறிச்சி, திண்டுக்கல் மாவட்டங்களில் சராசரியை விட, 10 சதவீதம் குறைவாக பொழியும். இதர மாவட்டங்களில் 4 முதல் 9 சதவீதம் வரை மழை குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.